close
Choose your channels

கௌதம் மேனன் அடுத்த படத்தின் பூஜை.. நாயகன் கன்பர்ம்.. நாயகி இவரா இருக்குமோ?

Wednesday, July 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் பூஜை குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இயக்குனர் கௌதம் மேனன் கடந்த 2001 ஆம் ஆண்டு ’மின்னலே’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நிலையில் அதன் பின்னர் பல வெற்றி படங்களை இயக்கினார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் கௌதம் மேனன் கேரளாவில் பிறந்தவராக இருந்தும் இதுவரை ஒரு மலையாள திரைப்படத்தை கூட இயக்காத நிலையில் தற்போது அவர் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் மம்முட்டி நாயகனாக நடிப்பதோடு அவரே இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜையில் மம்முட்டி, கௌதம் மேனன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள் என்பது இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களிலிருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் மம்முட்டி ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் இந்த படத்தில் சமந்தா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் நாயகி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இன்று பூஜை முடிந்த பின்னர் இன்று முதல் படப்பிடிப்பும் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment