'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைந்த நடிகையை அறிமுகம் செய்த கெளதம் மேனன்!

சிம்பு நடிப்பில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மும்பை உள்பட ஒரு சில பகுதிகளில் விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் கௌதம் மேனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜனவரி 3ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் நடிகை சித்தி இட்னானி கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இந்த படத்தில் பாவை என்ற கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். நடிகை சித்தி இட்னானி ஒருசில தெலுங்கு மற்றும் குஜராத்தி படங்களில் நடித்துள்ளார் என்பதும், இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் கெளதம் மேனன் தனது பதிவில் சிம்பு மற்றும் சித்தி இட்னானி இருக்கும் சூப்பர் ஸ்டில் ஒன்றையும் பதிவு செய்த நிலையில் அந்த ஸ்டில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.