விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' சூப்பர் அப்டேட் கொடுத்த கெளதம் மேனன்.. ரசிகர்கள் குஷி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அந்த வகையில் இந்த படத்தின் டிரைலர் வரும் 24ஆம் தேதி வெளியாகும் என இயக்குனர் கௌதம் மேனன் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் தற்போது ’லியோ’ படம் வெளியாகி உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டு வரும் நிலையில் 24ஆம் தேதி ஆன்லைனில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்.
கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
The Trailer of #DhruvaNatchathiram is playing exclusively at theatres near you! And releasing online on 24th October.@chiyaan @Jharrisjayaraj @OndragaEnt @oruoorileoru pic.twitter.com/bFNqFWlDnl
— Gauthamvasudevmenon (@menongautham) October 21, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com