கௌதம் மேனனின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! புரமோஷன் பணிகள் தொடக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் அவரது இயக்கத்தில் உருவான இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் வருண் நடிப்பில் உருவான 'ஜோஷ்வா இமை போல் காக்க' என்ற திரைப்படம் கடந்த சில வருடங்களாக ரிலீசுக்கு தயாராகியும் கிடப்பில் உள்ள நிலையில் தற்போது இந்த படம் மார்ச் 1ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த படம் தொடங்கப்பட்டு ஒரு சில ஆண்டுகளில் படப்பிடிப்பு முடிவடைந்தாலும் சில காரணங்களால் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் கௌதம் மேனன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' 'வெந்து தணிந்தது காடு' 'துருவ நட்சத்திரம் ' உள்ளிட்ட படங்களை இயக்கிய நிலையில் 'துருவ நட்சத்திரம்' படமும் ஒரு சில காரணங்களால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
இந்த நிலையில் 'ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படத்தை வரும் மார்ச் ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக கௌதம் மேனன் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் அவருடைய நெருங்கிய உறவினர் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வருண் தான் இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் பிக் பாஸ் வருணுக்கு மட்டுமின்றி கௌதம் மேனனுக்கும் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
It’s Joshua time and everything else takes a back seat.#Joshua Imai Pol Kaakha, starring @iamactorvarun to release worldwide on March 1st!!#JoshuaFromMarch01
— Gauthamvasudevmenon (@menongautham) February 16, 2024
Prod by @VelsFilmIntl @IshariKGanesh @Actor_Krishna @iamRaahei @srkathiir @singer_karthik @editoranthony pic.twitter.com/uEPU11AoEX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments