பல வருடங்களாக கிடப்பில் இருந்த கௌதம் மேனன் படம்.. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,January 19 2024]

பல வருடங்களாக கிடப்பில் இருந்த கௌதம் மேனனின் திரைப்படம் ஒன்றின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன

தமிழ் திரையுலகின் ஸ்டைலிஷ் இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனனின் இயக்கத்தில் உருவான திரைப்படங்களில் ஒன்று ’ஜோஸ்வா இமை போல் காக்க’. இந்த படம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி அதே ஆண்டு படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த படம் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை.

இந்த படத்திற்கு பின்னர் கௌதம் மேனன், ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ’வெந்து தணிந்தது காடு’ ’துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களை இயக்கி முடித்து விட்டார். இதில் ‘துருவ நட்சத்திரம்’ படமும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’ஜோஸ்வா இமை போல் காக்க’ படம் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் அவருடைய நெருங்கிய உறவினரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வருண் தான் இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்

எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் பிக் பாஸ் வருணுக்கு மட்டுமின்றி கௌதம் மேனனுக்கும் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.