கவுதம் மேனனின் 'ஜெயலலிதா' தொடரின் டைட்டில்!
- IndiaGlitz, [Wednesday,September 04 2019]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஒரே நேரத்தில் இயக்குனர் பிரியதர்ஷன், இயக்குனர் ஏ.எல். விஜய் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் ஆகியோர் இயக்கி வருகின்றனர்
பிரியதர்ஷனின் ஜெயலலிதா படத்தில் நித்யா மேனனும், ஏ.எல்.விஜய்யின் ஜெயலலிதா படத்தில் கங்கனா ரணாவத் நடித்து வரும் நிலையில் கௌதம் மேனனின் ஜெயலலிதா சீரியலில் ரம்யாகிருஷ்ணன் நடித்து வருகிறார்
இந்த நிலையில் ஜெயலலிதா சீரியல் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த கௌதம் மேனன் இந்த சீரியலுக்கு 'குவீன்' என்ற டைட்டிலை வைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. 'குவீன்' சீரியல் விரைவில் எம்எக்ஸ் பிளேயர் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும், ஒளிபரப்பாகும் தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் வரும் 6ம் தேதி வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது