ஸ்டைலிஷ் இயக்குனருடன் இணைந்த விஷால்!

  • IndiaGlitz, [Tuesday,February 12 2019]

நடிகரும், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கதலைவருமான விஷால் தற்போது 'அயோக்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் விஷாலின் அடுத்த படத்தை ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம்மேனன் இயக்கவுள்ளார். இந்த படம் தயாரிப்பாளர் சங்கத்தின் நிதிக்காக உருவாக்கப்படுவதாகவும், இந்த படத்தின் லாபம் முழுவதும் நலிந்த தயாரிப்பாளர்களின் நலனுக்காக செலவு செய்யப்படும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 

More News

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது?

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த 'Mr.லோக்கல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது.

ரஜினி மகள் திருமண வரவேற்பில் முகேஷ் அம்பானி

சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் மும்பையில் நடந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் சென்று கலந்து கொண்டார்

சென்னையில் மு.க.ஸ்டாலின்-முகேஷ் அம்பானி சந்திப்பு!

இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபர் முகேஷ் அம்பானி பல்வேறு பணிகளுக்காக நேற்று சென்னை வந்திருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.

என்.ஜி.கே டீசரை வெளியிடும் என்.ஜி.கே! புதிய அறிவிப்பு

நடிகர் சூர்யா நடித்துள்ள 'என்.ஜிகே திரைப்படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே.

சென்னை அருகே வங்கக்கடலில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?

சென்னை அருகே வங்கக் கடலில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.