'அன்புசெல்வன்' படம் குறித்து அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட கௌதம் மேனன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிப்பில் ‘அன்புசெல்வன்’ என்ற திரைப்படம் உருவாகுதாக இன்று காலை திரை உலக பிரபலங்கள் டுவிட்டர் பக்கங்களில் விளம்பரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படி ஒரு படத்தில் தான் நடிக்கவே இல்லை என கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கௌதம் மேனன் நடிப்பில் வினோத் குமார் என்பவரது இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் அன்புச்செல்வன் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு சில திரையுலக பிரபலங்கள் இந்த படத்தை புரமோஷன் செய்து கௌதம் மேனனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படி ஒரு படம் உருவாகி வருவதே தனக்கு தெரியாது என்றும், இந்த படத்தின் இயக்குனர் யார் என்று தனக்கு தெரியாது என்றும் நேரில் கூட பார்த்ததில்லை என்றும் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து இது போலியான விளம்பரம் என்பதை புரிந்து கொண்டு திரை உலக பிரபலங்களும் தங்கள் டுவிட்டுக்களை டெலிட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் பெயர்களில் பெயர்களில் இன்றுதான் ட்விட்டர் கணக்கே ஆரம்பிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
This is shocking & news to me.I have no idea what this film is that I’m supposed to be acting in.I don’t know or haven’t met the director whose name is on this poster.Producer has got big names to tweet this. It’s shocking & scary that something like this can be done so easily. https://t.co/CnMaB3Qo90
— Gauthamvasudevmenon (@menongautham) November 3, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments