தனுஷ்-கவுதம்மேனன் படத்தின் பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Saturday,November 19 2016]

கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ள நிலையில் அவர் இயக்கும் மற்றொரு படமான தனுஷின் 'எனை நோக்கி பாயும் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. நவம்பர் 27ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும் இந்த படத்தை கவுதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ் மதன் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கவுதம் மேனனின் வழக்கமான ஸ்டைலில் ரிச் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.