close
Choose your channels

கெளதம் மேனன் - மம்முட்டி படத்திற்கு இசையமைப்பது இவரா? அப்ப சூப்பர் ஹிட் பாடல் நிச்சயம்..!

Thursday, July 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் உருவாக இருக்கும் படம் குறித்த பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரலானது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இசையமைக்கும் இசையமைப்பாளர் குறித்த தகவல் கசிந்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் முதல் முதலாக மலையாள மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தில் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி மம்முட்டி இந்த படத்தை தயாரிக்கிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு நடிகரும் இசையமைப்பாளருமான தர்புகா சிவா இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. சசிகுமார் நடித்த ’கிடாரி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தர்புகா சிவா, அதன் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்திற்கு இசையமைத்தார். இந்த இரண்டு படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன நிலையில் ’குயின்’ ‘மத்தகம்’ போன்ற வெப்சீரிஸ்களுக்கு இசையமைத்தார்.

இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் தர்புகா சிவா இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான பாடல் கம்போசிங் பணியையும் அவர் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ போலவே இந்த படத்திலும் அவர் கௌதம் மேனனுக்காக சூப்பர் ஹிட் பாடல்களை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும், நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment