ஜிவி பிரகாஷ் படத்தில் வில்லனாகும் பிரபல இயக்குனர்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தற்போது ஒரே நேரத்தில் சுமார் எட்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அவற்றில் பல படங்கள் நிறைவடையும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் இந்த படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த மதிமாறன் என்பவர் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்த தகவல்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வந்த நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்ததை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ், கெளதம் மேனன், இயக்குனர் மதிமாறன் இணைந்த புகைப்படம் ஒன்று இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. இந்த படத்திற்கு ‘செல்பி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படினும் இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வமாக படக்குழுவினர் டைட்டிலை அறிவிக்கவில்லை.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பின் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது சமீபத்தில் வெளிவந்த ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் நடித்த காட்சிகளுக்கு ரசிகர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உலக நாடுகளின் கொரோனா நிவாரண நிதி, ஜிடிபி விகிதத்தில் எவ்வளவு தெரியுமா???

கொரோனா தாக்கத்தை எதிர்க்கொள்ள உலக நாடுகள் ஹெலிகாப்டர் மணியை அள்ளி வீசியிருக்கின்றன

யதார்த்தப் படங்களுக்கு சொந்தக்காரர் இயக்குநர் பாலுமகேந்திரா பிறந்த தினம் இன்று!!!

அதுவரை இயங்கிவந்த தமிழ்ச் சினிமா உலகை வேறொரு தளத்திற்கு மடைமாற்றிய புதுக் கலைஞன் பாலுமகேந்திரா என்றால் அது மிகையாகாது.

நாகர்கோயில் காசி குறித்து பெண் டாக்டர் கூறிய திடுக்கிடும் தகவல்

பள்ளி, கல்லூரி இளம் பெண்கள் முதல் குடும்ப பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோவில் காசி குறித்த பகீர் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி சந்தைக்கு வரும்!!! அமெரிக்க நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!!!

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் மாடர்னா தெரபிடிக்ஸ் மருந்து நிறுவனம் கொரோனா வைரஸை எதிர்க்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக செய்தி வெளியிட்டது.

'மாஸ்டர்' விநியோகிஸ்தருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்: கைகொடுத்து உதவிய தளபதி

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோவிட்-19 வைரஸ் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு