close
Choose your channels

சரத்குமாரின் அடுத்த படத்தில் வில்லனாகும் கெளதம் மேனன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Wednesday, May 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஹிட் லிஸ்ட்’. இந்த படத்தில் சரத்குமார், விஜய் கனிஷ்கா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் மேலும் சூரிய கதிர், கார்த்திகேயன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இது குறித்த ஸ்டில் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே விஜய்யின் ’லியோ’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் கௌதம் மேனன் நடித்து வரும் நிலையில் மேலும் ஒரு படத்தில் அவர் வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment