விஜய் நடிக்கவிருந்த படத்தில் அறிமுக ஹீரோவா?

  • IndiaGlitz, [Tuesday,July 23 2019]

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படமும், விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. இதில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தை ரிலீஸ் செய்ய பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உதவி செய்ய உள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் தற்போது கௌதம் மேனன் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஐசரி கணேஷ் அவர்களின் நெருங்கிய உறவினர் வருண் நாயகனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. வருண் ஏற்கனவே 'தலைவா', 'ஒரு நாள் இரவில்', உள்பட ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவாக இந்த படத்தில்தான் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் பிரிட்டனில் நடைபெற உள்ளதாகவும், இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு 'ஜோஸ்வா அத்தியாயம் ஒன்று' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளி வரவுள்ளது. ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட ஒரு படத்திற்கு 'யோஹன் அத்தியாயம் ஒன்று' என்ற தலைப்பு வைக்கப்பட்டு இருந்த நிலையில், விஜய் நடிக்கவிருந்த படத்தில்தான் வருண் நடிக்கவுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

More News

அஜித், விக்ரம், சூர்யா பட நடிகைக்கு 6 மாதம் ஜெயில்: நீதிமன்றம் உத்தரவு

அஜித் நடித்த அசல், சூர்யா நடித்த அயன், விக்ரம் நடித்த தூள், ஆகிய படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தவர் நடிகை கொய்னா மித்ரா. இவர் மாடல் அழகி பூனம் செதி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளதாகவும், க

சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர்

நடிகர் சூர்யா சமீபத்தில் கூறிய புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருவதை பார்த்து வருகிறோம்.

நிலாவுல தண்ணி இருந்தா எங்களுக்கு கொடுங்க: இஸ்ரோவுக்கு சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ நேற்று அனுப்பிய சந்திராயன் 2, வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்திய விண்வெளித்துறையின் மைல்கல்

மீண்டும் சேரனை குறிவைத்த மீராமிதுன்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய மீராமிதுன், ஒவ்வொருவராக குறிவைத்து அவர்களை டென்ஷாக்கி அவர்களுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வாங்கித்தரும் வேலையை செய்து வருகிறார்.

அத்திவரதரை தரிசனம் செய்த ரஜினிகாந்த் குடும்பத்தினர்

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சியளிக்கும் அத்திவரதரை காண தினமும் லட்சக் கணக்கான மக்கள் திரள்கிறார்கள்.