ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. கவுதம் கார்த்திக்

  • IndiaGlitz, [Tuesday,June 27 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவருடைய ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் சீமான், சுப்பிரமணியன் சுவாமி உள்பட ஒருசில தலைவர்கள் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக் நேற்று திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது ரஜினியின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது. நான் அவரை ஒரு சூப்பர் ஸ்டார் ஆக தான் பார்க்கிறேன். சூப்பர் ஸ்டாராகவே தொடர்ந்து இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன்' என்று கூறினார்.

மேலும் எனது குடும்பம் அரசியல் குடும்பமாக இருந்தாலும் எனக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது என்று கூறினார். மேலும் தந்தை நடித்த 'அக்னி நட்சத்திரம்' ரீமேக்' படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிப்பதில் 'தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

More News

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் இளையதலைமுறையினர்களுக்கு ஏற்படும் நன்மைகள்

வரும் ஜூலை 1 முதல் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த வரிவிதிப்புக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் இந்த வரிவிதிப்பால் இளையதலைமுறையினர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

ரஜினிகாந்த் ஒரு வெடிக்காத பட்டாசு. சீமான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது...

ஜிஎஸ்டி வரியை யார் கட்டுவது? தயாரிப்பாளர்கள்-விநியோகிஸ்தர்கள் இடையே கருத்துவேறுபாடு

மத்திய அரசு வரும் 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி முறையை அமல்படுத்தவுள்ளது. பிராந்திய மொழி படங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற தயாரிப்பாளர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதால் திரைப்படங்களுக்கு 28% வரி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது...

கமல் குடும்பத்தில் உருவாகும் மேலும் ஒரு இயக்குனர்

உலக நாயகன் கமல்ஹாசனின் குடும்பம் ஒரு சினிமா பல்கலைக்கழகம் என்று கூறினால் அது மிகையாகாது.

அரசியல் என்பது வியாபாரம் அல்ல. ரஜினி அரசியல் குறித்து கருணாஸ்

நகைச்சுவை நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'அரசியல் என்பது வியாபாரம் அல்ல, சேவை மனப்பான்மை உள்ளவர்கள் யாரும் அரசியலுக்கு வரலாம்' என்று கூறியுள்ளார்...