நடிகை ப்ரியா ஆனந்த் மீதான காதல் குறித்து கவுதம் கார்த்திக்
Send us your feedback to audioarticles@vaarta.com
முத்துராமன், கார்த்திக் ஆகியோர்களை அடுத்து 3வது தலைமுறையாக கோலிவுட் திரையுலகில் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் கவுதம் கார்த்திக். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 'ரங்கூன்' நல்ல விமர்சனத்தை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் 'ரங்கூன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனக்கும் நடிகை ப்ரியா ஆனந்துக்கும் இடையே காதல் என்று பரவி வரும் வதந்திக்கு விளக்கம் அளித்தார். ப்ரியா ஆனந்தை எனக்கு திரையுலகிற்கு வரும் முன்பே தெரியும். அவர் எனக்கு குடும்ப நண்பர். நாங்கள் இருவரும் அடிக்கடி காபி ஷாப் சென்றிருக்கின்றோம். இதை வைத்து எனக்கும் அவருக்கும் காதல் என்று கூறுவது சரியில்லை. என்னுடைய திருமணம் நிச்சயம் காதல் திருமணம் தான். அது ப்ரியா ஆனந்தா? அல்லது வேறு யாரோவா? என்பது தெரியாது. நம் தலையில் என்ன எழுதியுள்ளதோ அதன்படிதான் நடக்கும். இருப்பினும் எனது திருமணம் 35 வயதுக்கு மேல் தான் நடக்கும்' என்று கூறினார்.
கவுதம் கார்த்திக்கும் ப்ரியா ஆனந்தும் 'வை ராஜா வை', 'முத்துராமலிங்கம்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தான் சிறுவயதில் இருந்தே பிரிட்டிஷ் பள்ளியில் படித்ததால் தமிழ்ப்படங்கள் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றும், தற்போது தான் தாத்தா, அப்பா நடித்த படங்களை பார்த்து வருவதாகவும் அவர் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com