close
Choose your channels

மீண்டும் முழுநீள நகைச்சுவை படத்தில் கவுதம் கார்த்திக்

Saturday, October 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவுதம் கார்த்திக் நடித்த 'ஹரஹர மகாதேவகி' திரைப்படம் படக்குழுவினர்களே எதிர்பாராத வகையில் அபார வெற்றி இளைஞர்களின் பேராதரவை பெற்று வசூல் மழை பொழிந்து வருகிறது. இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இருந்தாலும் நான்ஸ்டாப் நகைச்சுவை படம் என்பதே இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் அடுத்த படத்திலும் கவுதம் கார்த்திகே நடிக்கின்றார். ஏற்கனவே இந்த படத்திற்கு 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் இன்று இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. இந்த படத்தை சந்தோஷ் ஜெயகுமார் இயக்கவுள்ளார். இந்த படமும் முழுநீள நகைச்சுவை படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் நாயகியாக பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளை ஓவியா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் அந்த செய்தியை படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment