தாத்தா முத்துராமனுக்கு கெளதம் கார்த்திக்கின் நெகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்து!

  • IndiaGlitz, [Monday,July 05 2021]

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக் என்பதும் மணிரத்னம் இயக்கிய ’கடல்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’வை ராஜா வை’ ’இவன் தந்திரன்’ ’ஹர ஹர மகாதேவி’ ’இருட்டு-அறையில்-முரட்டு-குத்து’ ’தேவராட்டம்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் சிம்புவுடன் ’பத்து தல;, பார்த்திபனுடன் ஒரு திரைப்படம், சேரனுடன் ’ஆனந்தம் விளையாடும் வீடு’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கௌதம் கார்த்திக்கின் தந்தை நவரச நாயகன் கார்த்திக் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் கௌதம் கார்த்திக் பழம்பெரும் நடிகர் முத்து ராமனின் பேரன் என்பதும் தெரிந்ததே. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோர் முன்னணியில் இருந்த காலத்திலேயே ஹீரோவாக அவர் தமிழ் திரையுலகில் வலம் வந்துள்ளார் என்பதும் தெரிந்ததே. மேலும் நவரச திலகம் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணசித்திர நடிகர் என தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முத்துராமன் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவு செய்துள்ளார்.

அதில் ’நான் உங்களை நேரில் பார்க்கவில்லை என்றாலும் உங்களை பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். நான் கேள்விபட்ட அனைத்தும் என்னை மகிழ்ச்சி அடைய செய்ததோடு, அதன் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். உங்கள் பேரனாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். உங்களைப் போலவே நானும் அன்பான, கடின உழைப்பாளியாக, திறமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்வேன் என்று நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாத்தா’ என்று கூறியுள்ளார். கௌதம் கார்த்திக்கின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


 

More News

'குக் வித் கோமாளி' தாமு இவ்வளவு ஒல்லியா இருந்தாரா? வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 'குக்'கள் மற்றும் கோமாளிகள்

மீண்டும் அனிருத், மூன்று ஹீரோயின்கள்: தனுஷின் அடுத்த படம் குறித்த தகவல்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும்,

வைட்டமின் மாத்திரைகள் Immune systemsystem-ஐ வலிமை ஆக்குமா?

கொரோனா நேரத்தில் சிலர் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதை வாடிக்கையாகவே ஆக்கிவிட்டனர்.

சுயஇன்பம் செய்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் கூடுமா? மருத்துவரின் பதில்!

கொரோனா வைரஸ் உலகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கொடிய நோய்த்தொற்றாக பரவிவருகிறது.

குடும்பத்தோடு கடற்கரையில் காற்று வாங்கும் ரொனால்டோ… செம வைரல் புகைப்படம்!

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரும் போர்ச்சுகல் அணியின் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டா