தாத்தாவின் பிறந்த நாளில் சிவகுமாருக்கு நன்றி தெரிவித்த கவுதம் கார்த்திக்..!

  • IndiaGlitz, [Tuesday,July 04 2023]

பழம்பெரும் நடிகர் முத்துராமன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பழம்பெரும் நடிகரும் சூர்யா - கார்த்தியின் தந்தையுமான சிவக்குமாருக்கு முத்துராமனின் பேரனும், கார்த்திக்கின் மகனுமான கவுதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

நவரச நாயகன் என்று தமிழ் சினிமாவில் அறியப்பட்டவர் நடிகர் முத்துராமன். இவர் எம்ஜிஆர் சிவாஜி உடன் பல திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இன்று முத்துராமன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது நினைவுகளை திரையுலகினர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கவுதம் கார்த்திக் தனது தாத்தா மற்றும் சிவக்குமார் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்

அதில் ’ஒரே ஒரு முறை உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கலாம், ஆனால் அது நிகழவில்லை. சினிமா துறையில் நான் பயணம் செய்யும்போது உங்களைப் பற்றி நான் ஒவ்வொரு நாளும் பலரிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன். எல்லோரும் என்னிடம் சொல்லும் ஒரு விஷயம் நீங்கள் மிகவும் அன்பான மற்றும் அழகான நபராக இருந்திருக்கிறீர்கள் என்று தான். நீங்கள் இல்லாமல், உங்கள் ஆசி இல்லாமல் நான் இங்கே இல்லை, லவ் யூ தாத்தா, பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்

மேலும் இந்த புகைப்படத்தை அனுப்பிய சிவகுமார் அவர்களுக்கு எனது நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

புதுக்கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம்.. மனைவி குழந்தைகளுடன் க்யூட் புகைப்படம்..!

விஜய் டிவியில் குறிப்பாக 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் புதிய கார் வாங்கிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் கார் வாங்கியுள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. 

'PS2' படத்தை அடுத்து 'P2' படம்.. நீண்ட இடைவெளிக்கு பின் களமிறங்கும் தேவா..!

 'பொன்னியின் செல்வன்' பாகம் 2 திரைப்படம் தான் 'PS2' என்ற தலைப்பில் வெளியானது என்பதும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 'PS2' பாடத்தை அடுத்து 'P2' என்ற பெயரில் தற்போது

பப்ஜி காதலனுக்காக 4 குழந்தைகளுக்கு தாய் செய்யக்கூடிய காரியமா இது? அதிர்ச்சி தகவல்!

ஆன்லைனில் பப்ஜி விளையாடும்போது சக போட்டியாளருடன் பழக்கம் ஏற்பட்டு அதனால் இளம்பெண் ஒருவர்

ராம்சரண் தேஜாவை அடுத்து மேலும் ஒரு பிரபலம்.. 'லியோ'வில் என்ன தான் நடக்குது..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படம் ஏற்கனவே ஒரு மல்டி ஸ்டார் படம் என்ற நிலையில் அவ்வப்போது மேலும் சில பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து கொண்டிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும்

நயன்தாராவை இயக்கும் 'லியோ' பிரபலம்.. லேடி சூப்பர் ஸ்டார் காட்டில் மழை..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் மற்றும் இரட்டை குழந்தைகளுக்கு பின்னர் திரைப்படங்களில் நடித்துக் கொள்வதை குறைத்துக் கொள்வார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.