எனக்கு திருமணம் என்பது உண்மைதான்: மனம் திறந்த கௌதம் கார்த்திக்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் விரைவில் திருமணம் செய்யப் போகிறார் என்றும் குறிப்பாக நடிகை மஞ்சிமா மோகனை அவர் காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்றும் வதந்திகள் பரவின. இந்த நிலையில் தனக்கு திருமணம் நடைபெற இருப்பது உண்மைதான் என சமீபத்தில் அளித்த பேட்டியில் கௌதம் கார்த்திக் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் நவரச நாயகன் என்று போற்றப்பட்ட நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய ’கடல்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு ’வை ராஜா வை’ ’இவன் தந்திரன்’ ‘தேவராட்டம்’ உள்பட பல படங்களில் நடித்த கௌதம் கார்த்திக் தற்போது சிம்புவுடன் ’பத்து தல’ மற்றும் ’1947’ ஆகிய படங்களில் நடித்து வருகிறா. இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டுக்குள் ரிலீசாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனுக்கும் காதல் என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றும் வதந்திகள் வெளியான நிலையில் இந்த தகவலை இரு தரப்புமே மறுத்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் கௌதம் கார்த்திக் இந்த ஆண்டு தனக்கு திருமணம் நடைபெற உள்ளது என்றும் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த பேட்டியில் அவர் மணமகள் யார் என்பதை தெரிவிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் அவர் யாரை திருமணம் செய்யப் போகிறார் என்பதை அறிய காத்திருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout