காலில் விழுந்து ஆசி பெற்ற கெளதம் கார்த்திக்.. யாரிடம் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,December 13 2022]

நடிகர் கௌதம் கார்த்திக் சமீபத்தில் நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்த நிலையில் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி ’தேவராட்டம்’ என்ற படத்தில் தன்னுடன் நடித்த மஞ்சிமா மோகனை நடிகர் கௌதம் கார்த்திக்கு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் வருகை தந்தார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் கெளதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்தப்படத்தின் கேப்ஷனாக அவர் பதிவு செய்திருப்பதாவது:

நான் அறிந்த மிகவும் இனிமையான மற்றும் அன்பான நபரான எனது பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் அன்பான பாட்டி எங்கள் முழு குடும்பத்தின் மதிப்புமிக்க நபராக இருந்து வருகிறார். எங்கள் குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்கும் அவருக்கு என நன்றி. உங்களை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் நீங்கள் எப்போதும் நேர்மறையாகவும் அன்பாகவும் இருப்பதை நான் பார்த்திருக்கின்றேன். அதற்கு என்னுடைய நன்றி. நீங்கள் எங்களை எப்போதும் சிரிக்க வைத்து கொண்டிருப்பதற்கும் நன்றி. நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் கெளதம் கார்த்திக் தற்போது சிம்புவுடன் ‘பத்து தல’ மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘16 ஆகஸ்ட் 1947’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.