close
Choose your channels

கெளதம் கார்த்திக்கின் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' அப்டேட்

Monday, November 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்த 'ஹரஹர மகாதேவகி' படத்தின் வெற்றிக்கு பின்னர் அதே நிறுவனத்தின் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடித்து வரும் திரைப்படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் நடந்தது. இந்த நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் படக்குழு தாய்லாந்து செல்லவுள்ளது.

கெளதம் கார்த்திக் ஜோடியாக இந்த படத்தில் வைபவி ஷாண்டில்யா நடிக்கின்றார். இவர் ஏற்கனவே சர்வர் சுந்தரம் மற்றும் சக்கப்போடு போடு ராஜா ஆகிய படங்களில் நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இந்த படத்தில் பேயாக நடித்து வருகிறார். நடிகை யாஷிகா இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

மேலும் மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, மீசைய முறுக்கு புகழ் ஷா ரா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இசை- பாலமுரளி பாலு. ஒளிப்பதிவு- தருண் பாலாஜி. 2018ஆம் ஆண்டு துவக்கத்திலேயே இருட்டு அரையில் முரட்டுக் குத்து படத்தை வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment