'வலி தெரியாம இருக்க, அதைவிட பெரிய வலியை கொடுக்கணும்: 'ஆகஸ்ட் 16 1947' டிரைலர்..!

  • IndiaGlitz, [Tuesday,March 21 2023]

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில், பொன் குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிய திரைப்படம் ’ஆகஸ்ட் 16 1947’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்த கொடூர காட்சிகளின் அம்சமாக இந்த ட்ரெய்லர் இருப்பதைப் பார்க்கும்போது இந்த படத்தினை உடனே திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வலி தெரியாமல் இருக்க அதைவிட பெரிய வலியாக கொடுக்க வேண்டும் என்று பிரிட்டிஷ்காரன் கூறுவதும், ’தைரியம் இல்லாதவன் கத்தியை வைத்திருப்பது போல், தைரியம் இல்லாத உங்களுக்கெல்லாம் சுதந்திரம் கிடைத்தால் மட்டும் என்னடா செய்யப் போகிறீர்கள்’ என்று ஆவேசமாக கௌதம் கார்த்திக் பேசும் வசனம் இந்த ட்ரைலரில் உள்ளது.

ஒத்த பொண்ண பொதைச்சி கொன்னுட்டு அதை நினைச்சு நினைச்சு புலம்பற வாழ்க்கைக்கு பதிலா, ஒருத்தனையாவது கொன்னுட்டு சாவுங்க’ என கௌதம் கார்த்திக் வசனம் இந்த ட்ரெய்லரின் ஹைலைட்டாக உள்ளது

கெளதம் கார்த்திக், ரேவதி ஷர்மா, புகழ், ரிச்சர்ட் அஷ்டன், ஜேசன் ஷா நடிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.