சிம்புவிடம் ஆட்டோகிராப் வாங்கிய பிரபல நடிகர்: வைரலாகும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கவுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தற்போது அவர் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'முஃப்தி' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் பிரபல இளம் நடிகர் கவுதம் கார்த்திக் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சிம்புவும் கவுதம் கார்த்திக்கும் முதல்முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே சிம்புவிடம் கவுதம் கார்த்திக் ஆட்டோகிராப் வாங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள கவுதம் கார்த்திக், 'சிம்பு ஒரு மிகச்சிறந்த மனிதநேயம் உள்ளவர் என்றும், அவருடைய ரசிகனான தான் அவருடன் நடிப்பதில் பெருமை' என்றும் குறிப்பிட்டுள்ளார். சிம்புவிடம் கவுதம் கார்த்திக் ஆட்டோகிராப் வாங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
For the #STR fans out there! He is such a gem of a human being! Big heart ❤!
— Gautham Karthik (@Gautham_Karthik) June 26, 2019
Thank you brother! You rock! ?????? pic.twitter.com/SeMLnCE3r5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments