சிம்புவிடம் ஆட்டோகிராப் வாங்கிய பிரபல நடிகர்: வைரலாகும் வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,June 26 2019]

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கவுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தற்போது அவர் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'முஃப்தி' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் பிரபல இளம் நடிகர் கவுதம் கார்த்திக் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சிம்புவும் கவுதம் கார்த்திக்கும் முதல்முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே சிம்புவிடம் கவுதம் கார்த்திக் ஆட்டோகிராப் வாங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள கவுதம் கார்த்திக், 'சிம்பு ஒரு மிகச்சிறந்த மனிதநேயம் உள்ளவர் என்றும், அவருடைய ரசிகனான தான் அவருடன் நடிப்பதில் பெருமை' என்றும் குறிப்பிட்டுள்ளார். சிம்புவிடம் கவுதம் கார்த்திக் ஆட்டோகிராப் வாங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More News

சிந்துபாத் படத்தின் சிறப்பான ரன்னிங் டைம்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி நாளை வெற்றிகரமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில்

சென்னை தண்ணீர்ப்பஞ்சம் குறித்து டைட்டானிக் ஹீரோவின் பதிவு!

சென்னையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்து ஆடிவருகிறது. மழை இல்லாததால் சென்னைக்கு குடிநீர் தரும் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டுபோய்விட்டது.

பிக்பாஸ் வீட்டை கண்ணீர் குளமாக்கிய ரேஷ்மா!

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே இப்போதைக்கு பிரச்சனை வருகிற மாதிரி தெரியவில்லை, அல்லது தாமதமாக பிரச்சனை வரும் என்பதை புரிந்து கொண்ட பிக்பாஸ்,

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் தோல்வி அடைந்தாலும் அவர் தற்போது பி.எஸ்.மித்ரன், ரவிகுமார், பாண்டிராஜ் மற்றும் விக்னேஷ் சிவன் என நான்கு

இளையராஜா கம்போஸ் செய்த ஆங்கில பாடல்: எந்த படத்திற்கு தெரியுமா?

இசைஞானி இளையராஜா மொழிகளை கடந்த ஒரு இசைக்கலைஞர் என்பதும், இசைக்கு மொழி தேவையில்லை என்று அவர் அடிக்கடி கூறுவதும் தெரிந்ததே.