close
Choose your channels

கௌதம் கார்த்திக் அடுத்த படத்தை இயக்கும் விஜய் பட இயக்குனர்!

Thursday, September 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் இளம் நாயகனான கௌதம் கார்த்திக் ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை விஜய் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர் இயக்க உள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது

கடந்த 1999ஆம் ஆண்டு விஜய் நடித்த சூப்பர் ஹிட் படம் ’துள்ளாத மனமும் துள்ளும்’. இந்த படத்தை இயக்குனர் எழில் இயக்கிய நிலையில் அதன் பின்னர் அவர் பல வெற்றித் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வருகிறார். குறிப்பாக கடந்த 2016ஆம் ஆண்டு இவர் இயக்கிய ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனர் எழில் இயக்கவுள்ள அடுத்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் பார்த்திபன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இது ஒரு த்ரில் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்றும் முழுக்க முழுக்க இந்த திரைப்படத்தில் சஸ்பென்ஸ், த்ரில் சம்பந்தப்பட்ட காட்சிகளில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே எழிலின் வழக்கமான ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவை காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment