மஞ்சிமா மோகன் மீதான காதலை உறுதி செய்த கவுதம் கார்த்திக்: எப்படி தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல வெற்றிகரமான நட்சத்திர தம்பதிகள் இருந்து வரும் நிலையில் மேலும் ஒரு நட்சத்திர ஜோடியாக கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்யப்போவதாகவும் வெளிவந்த தகவல் ஏற்கனவே பார்த்தோம்.
’தேவராட்டம்’ என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாகவும் இந்த காதலுக்கு இரு குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்டி விட்டதை அடுத்து விரைவில் அதிகாரபூர்வ திருமண தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று மஞ்சிமா மோகன் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய கவுதம் கார்த்திக் தனது காதலையும் கிட்டதட்ட உறுதி செய்துள்ளார். அதில் அவர் மஞ்சிமா மோகனின் புகைப்படத்தை பதிவு செய்து, ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னைப் போன்ற ஒரு வலிமையான பெண் என்னுடைய வாழ்க்கையில் இணைவதை நினைத்து நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். எப்போதும் சந்தோசமாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்’ என பதிவு செய்துள்ளார்
மஞ்சிமா மோகன் தன்னுடைய வாழ்க்கையில் இருப்பதை கவுதம் கார்த்திக் உறுதி செய்ததை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments