விஜய் பட இயக்குனரின் அடுத்த படத்தில் பார்த்திபன் - கௌதம் கார்த்திக்!

  • IndiaGlitz, [Sunday,November 22 2020]

தளபதி விஜய் நடித்த ’துள்ளாத மனமும் துள்ளும்’ விஷ்ணு விஷால் நடித்த ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் எழில். இவருடைய அடுத்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பார்த்திபன் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்

பிரபல க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவல் ஒன்றை தழுவி எடுக்கப்படும் இந்த படம் ஒரு கொலை சம்பவத்தை மையப்படுத்திய கதையம்சம் கொண்டது என்று இயக்குனர் எழில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் பணிபுரியும் கேரக்டரிலும் பார்த்திபன் போலீஸ் கேரக்டரிலும் நடித்து வருகின்றனர்.

த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றும் இயக்குனர் எழில் தெரிவித்துள்ளார். மேலும் சாய்பிரியா என்ற அறிமுக நடிகை இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்றும் இயக்குனர் எழில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. சென்னை, புதுச்சேரி, ஊட்டி ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளார்.