கெளதம் கார்த்திக்-மஞ்சிமா திருமண அழைப்பிதழ் இதுதான்: என்ன ஸ்பெஷல் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,November 17 2022]

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

நவம்பர் 28ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் இருவீட்டாரும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமண அழைப்பிதழ் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால் முழுக்க முழுக்க கையால் எம்பிராய்டரி செய்யப்பட்டு இந்த திருமண அழைப்பு அழகிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமண அழைப்பிதழ் திரை உலக பிரபலங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் திருமண அழைப்பிதழின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

விஜய்யின் 'தளபதி 67' படத்தில் கமல்ஹாசனா? லோகேஷின் வேற லெவல் பிளான்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 67' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

தனுஷின் 'வாத்தி' ரிலீஸ்  தேதி அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்

தனுஷ் நடித்த 'வாத்தி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும்

ஜீ5 ஒரிஜினல்ஸ் “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்”  இணையத் தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் ஓடிடி உலகில்  புதுமையான படைப்புகள் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் ஜீ5 தளத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்”  இணையத் தொடர்.

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்!

கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜப்பான்' திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க பிரபல இயக்குநர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதுமட்டும் வேண்டவே வேண்டாம்: அஜித்தின் முக்கிய அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை என்றாலும் அவர் தனது ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய முக்கிய தகவல்களை தனது மேனேஜர் மூலம் கூறி வருகிறார் என்பது தெரிந்ததே.