கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமண தேதி எப்போது? 

  • IndiaGlitz, [Saturday,November 12 2022]

தமிழ் திரைஉலகில் ஏற்கனவே பல நட்சத்திர ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் சமீபத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தங்கள் காதலை வெளிப்படுத்தினார் என்பதும் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமண தேதி குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமணம் நவம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் சென்னையில் திருமணம் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சென்னை அல்லது ஊட்டியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தவும் இரு வீட்டினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமண தேதி மற்றும் வரவேற்பு தேதி குறித்த அறிவிப்பை இருவீட்டாரும் அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து காதலர்களான கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் 'தேவராட்டம்’ என்ற திரைப்படத்தில் நடித்த போது இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர் என்பதும் சமீபத்தில்தான் தங்கள் காதலை அதிகாரபூர்வமாக அறிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தனலட்சுமி 'பளார்' என்ற அறை வாங்குவார் என கமல் முன் கூறிய அசீம்! என்ன காரணம்?

தனலட்சுமி இங்கே நடந்து கொள்வது போன்று வெளியில் நடந்து கொண்டால் 'பளார்' என்று அறை தான் வாங்குவார் என கமல்ஹாசன் முன்னிலையில் அசீம் கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கார்த்தியின் 'ஜப்பான்' படம்: சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

 கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் 'ஜப்பான்'  என்ற திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜையுடன்

வீட்டிற்குள் 2 அடியில் தண்ணீர்: இசையமைப்பாளரின் புகாருக்கு தமிழக அமைச்சரின் பதில்!

 சென்னையில் பெய்த கனமழை காரணமாக தனது வீட்டிற்குள் மழைநீர் புகுந்து விட்டது என்றும் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது என்றும் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில்

ஜிலேபி கொடுத்த நபர் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்த சமந்தா: வைரல் வீடியோ

 நடிகை சமந்தா தனக்கு ஜிலேபி குறித்த நபர் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரலாகி வருகின்றன. 

சூரியனுக்கு அருகில் இருப்பது போல் இருந்தது: ரஜினியை சந்தித்த 'லவ் டுடே' இயக்குனரின் பதிவு

 சூரியனுக்கு அருகே இருப்பது போல் இருந்தது என சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்த பின்னர் 'லவ்டுடே' இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.