close
Choose your channels

கன்னத்தோடு கன்னம் ஒட்டிய போட்டோஷூட்.. மஞ்சிமாவை விட கொள்ளை அழகு.. கௌதம் கார்த்திக்கின் புதிய லுக்..!

Sunday, June 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கௌதம் கார்த்திக் தனது மனைவி மஞ்சிமா உடன் எடுத்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புதிய கெட்டப் மஞ்சிமாவை விட அழகாக இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

நவரச நாயகன் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’கடல்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு கூட அவர் அடுத்த ’பத்து தல’ மற்றும் ’ஆகஸ்ட் 16 1947’ ஆகிய படங்கள் வெளியான நிலையில் இந்த ஆண்டு அவர் ’கிரிமினல்’ மற்றும் ’மிஸ்டர் எக்ஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆர்யாவுடன் இணைந்து நடித்த ’மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு விழா இன்று நடைபெற்றது என்பதும், இதில் கெளதம் கார்த்திக் புதிய கெட்டப்புடன் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கெளதம் கார்த்திக் மனைவி மஞ்சிமா உடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மஞ்சிமாவின் கன்னத்தோடு கன்னம் ஒட்டிய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ’மஞ்சிமாவை விட நீங்க தான் அழகாக இருக்கிறீர்கள் என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றன.

மேலும் ஒரு சிலர் ’டக்குனு பார்த்தா சுஷாந்த் சிங் மாதிரி இருக்கீங்க என்றும், மேக்கப் இல்லாமல் அழகாக இருக்கும் நடிகர் நீங்கள்தான் என்றும், உங்கள் அப்பா மாதிரி நீங்களும் அழகாக இருக்கின்றீர்கள் என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment