close
Choose your channels

திருமண நிச்சயதார்த்த விழாவில் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்: வைரல் புகைப்படம்!

Monday, September 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் திருமண நிச்சயதார்த்த விழாவில் இருவரும் கலந்து கொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

‘தேவராட்டம்’ என்ற திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்த நிலையில் இருவருக்கும் காதல் என்றும் விரைவில் இருவருக்கும் திருமணம் என்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது.

இந்த வதந்தி குறித்து விளக்கமளித்த மஞ்சிமா மோகன் ’இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தன்னுடைய பெற்றோர் இந்த வதந்தியால் மிகவும் மனமுடைந்து உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் நிச்சயதார்த்த விழா ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்டுள்ளனர். கௌதம் கார்த்திக்கின் நெருங்கிய நண்பரான கோபி என்பவரின் நிச்சயதார்த்த விழாவில் தான் இருவரும் இணைந்து கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கௌதம் கார்த்திக் தற்போது சிம்புவுடன் ’பத்து தல’ என்ற திரைப்படத்திலும் ’ஆகஸ்ட் 16, 1947’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment