காஷ்மீர் பிரச்சனையில் மோதிக்கொண்ட இந்திய பாகிஸ்தான் வீரர்கள்

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் இரண்டாகப் பிரிக்கப் பட்ட விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், திரையுலகினர் உள்பட பலர் இது குறித்து தங்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில், கிரிக்கெட் வீரர்களும் இது குறித்த கருத்துகளை தெரிவித்துள்ளனர்

காஷ்மீர் விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி கூறியதாவது: காஷ்மீர் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் ஐநா சபை உறுதியளித்தவாறு வழங்க வேண்டும். சுதந்திர உரிமை என்பது அனைவருக்கும் சொந்தமானது. ஐநா சபை உருவாக்கப்பட்டதே இதற்காகத்தான். அது ஏன் தற்போது தோன்றுகிறது என்று தெரியவில்லை. காஷ்மீர் மாநிலத்தில் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்

இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கூறியபோது, 'இந்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் குற்றச்செயல்களுக்கு எதிரான மனிதநேய நடவடிக்கைகள்> இதற்கு குரல் கொடுக்கும் அஃப்ரிடி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் குற்றங்கள் குறித்து பேச மறந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியதோடு 'கவலை வேண்டாம் மகனே இவை அனைத்தும் தீர்க்கப்படும்' என்று பதிவு செய்துள்ளார்

சமீபத்தில் கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்து டெல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

காஷ்மீர் பிரச்சனை: அமலாபாலுக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்

காஷ்மீர் மாநிலத்தில் 370ஆவது சிறப்பு அந்தஸ்தை நேற்று மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன்களாக பிரிக்க முடிவு செய்துள்ளது.

அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தமிழ் சினிமா உலகினர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருவது திருட்டு டிவிடி மற்றும் சட்டவிரோதமாக ஆன்லைனில் படம் வெளியிடுவது

ஒய்.ஜி.மகேந்திரன் தாயார் காலமானார்

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93

சூர்யாவுக்கு நன்றி கூறிய பிரபாஸ்! ஏன் தெரியுமா? 

பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படம் முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் பணிகள் தாமதம்

'கோமாளி' சர்ச்சை காட்சியை ரஜினியே பாராட்டினார்: ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த சர்ச்சை காட்சி ஒன்றுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை