டெல்லி அணி கேப்டன் கவுதம் காம்பீர் திடீர் விலகல்
- IndiaGlitz, [Wednesday,April 25 2018]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் பங்கு பெற்றுள்ள அணிகளில் ஒன்றாகிய டெல்லி அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் திடீரென கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தொடர் தோல்வி காரணமாக கவுதம் காம்பீர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இனிவரும் போட்டியில் வெற்றி பெற்று டெல்லி அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்