close
Choose your channels

தள்ளி போகாதே' தாமதம் ஆக யார் காரணம்?

Saturday, July 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவுதம் மேனன் - சிம்பு கூட்டணியின் வெளியான 'விண்ணை தாண்டி வருவாயோ' நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து மீண்டும் அதே கூட்டணி இணைந்து உருவாக்கியுள்ள படம் 'அச்சம் என்பது மடமையடா'. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இளைஞர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற 'தள்ளிப்போகாதே' என்ற பாடலின் படப்பிடிப்பு மட்டுமே பெண்டிங் உள்ளது.
இந்நிலையில் இந்த பாடலின் படப்பிடிப்புக்கு சிம்பு வர மறுப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்த ஒரு பாடலால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே இருப்பதாகவும், ஒருவேளை 'தள்ளிப் போகாதே' பாடல் இல்லாமல் இந்த படம் வெளிவந்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என்ற ரீதியில் கவுதம் மேனன் சமீபத்தில் விரக்தியுடன் கூறியிருந்தார்.
கெளதம் மேனனின் இந்தக் குற்றச்சாட்டு சிம்பு தரப்பை அதிருப்தி அடைய செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிம்பு தரப்பினர் கூறியபோது, "கிட்டத்தட்ட இந்த படம் முடியுந்தருவாயில் உள்ளது. ஆனால் இந்த படத்திற்காக இன்னும் சம்பளம் எதுவும் சிம்பு பெற்றுக்கொள்ளவில்லை என்றும், கவுதம் மேனன் மீது சிம்புவுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது. இருப்பினும் பணமும் முக்கியம் என்றும் சிம்புக்கு தரவேண்டிய சம்பளப்பாக்கி வந்தால் அந்த பாடல் காட்சியின் படப்பிடிப்புக்கு சிம்பு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்காமல், ஒரு நல்ல படைப்பு வெளிவருவதற்கு இரு தரப்பினர்களும் முயல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை அடுத்து இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு விரைவில் படத்தை முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment