கெளதம் மேனனின் அடுத்த படம் ஆக்சனா? ரொமான்ஸா? அவரே அளித்த பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் ஆகிய இரண்டும் கலந்த ஒரு கலவையாக இருந்த நிலையில் அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
’துருவ நட்சத்திரம்’ மற்றும் ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ ஆகிய படங்களை முடித்த பின் அவர் இயக்கப்போகும் படம் என்ன என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தனது அடுத்த படம் ஆக்ஷன் அல்லது ரொமான்ஸ் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ரொமான்ஸ் படம் என்று பதிலளித்துள்ளார். இதனை அடுத்து அவரது அடுத்த படம் ’விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘வாரணம் ஆயிரம்’ போன்று ஒரு முழுக்க முழுக்க ரொமான்ஸ் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நண்பர்களுடன் பொழுது போக்கு அல்லது உடற்பயிற்சி என்ற கேள்விக்கு நண்பர்களுடன் பொழுது போக்கு என்று பதில் கூறிய கெளதம் மேனன், பயணம் செய்வதில் ரயில் மார்க்கமா? சாலை மார்க்கமா? என்ற கேள்விக்கு அவர் ரயிலை தேர்வு செய்துள்ளார்.
மேலும் சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் எதில் விருப்பம் என்ற கேள்விக்கு சாக்லேட் என்று பதிலளித்த கெளதம் மேனன், நடிப்பு, பாடுவது இதில் எதில் ஆர்வம் என்ற கேள்விக்கு நடிப்பு என்ற பதில் அளித்தார். மேலும் கல்லூரி மற்றும் பள்ளி வாழ்க்கையில் எது சிறந்தது என்ற கேள்விக்கே கல்லூரி என்று பதிலளித்த கெளதம் மேனன், நண்பர்களுடன் பயணம் அல்லது தனியாக பயணம் என்பதில் தனியாக பயணம் செய்வதே தனக்கு விருப்பம் என்று கூறினார்.
மேலும் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் மற்றும் இளையராஜா இவர்களில் பிடித்தவர் யார்? என்ற கேள்விக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் ஏஆர் ரகுமான் என்று பதிலளித்த கேளதம் மேனன், மணிரத்னம் மற்றும் பாலசந்தர் இவர்களில் யார் பிடித்தவர் என்ற கேள்விக்கு மணிரத்னம் என்று பதில் கூறினார்.
மேலும் கமல்ஹாசன் மற்றும் அமிதாப்பச்சன் ஆகிய இருவரில் தனக்கு பிடித்தவர் கமல் ஹாசன் என்றும், ஒருவேளை திரைப்பட இயக்குனராக இல்லாமல் இருந்தால் தான் கிரிக்கெட் பிளேயர் ஆக மாறி விட்டேன் என்று கூறினார். மேலும் இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout