கமலுக்கு எதிராக கௌதமியை களத்தில் இறக்குகிறதா பாஜக..?!
Send us your feedback to audioarticles@vaarta.com
மோடி, பாஜக, மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் மிகத் தீவிரமாக கருத்துகளை கூறி வரும் கமலுக்கு எதிராக கவுதமியை பாஜக களம் இறக்கியுள்ளது.
கமலுடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்ததுடன் அவருடன் பத்து வருடங்களுக்கும் மேலாக துணைவியாக இருந்தவர் கவுதமி. சில வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக கமலிடம் இருந்து கவுதமி பிரிந்தார். பிறகு சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக முயற்சித்த கவுதமிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் அரசியல் பக்கம் திரும்பினார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் கௌதமி. பின்னர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சொன்ன போது அது சர்ச்சையானது. கடந்த மாதம் சென்னையில் பாஜக சார்பில் முப்பெரும விழா நடைபெற்றது. இந்த விழாவில் கவுதமி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். உள்ளாட்சித் தேர்தலிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக சொல்லப்பட்டது.
கமலுக்கு எதிராக இவர் சரியானவராக இருப்பர் என பாஜக தலைமை நினைப்பதாக அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். விரைவில் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் பதவி கௌதமிக்கு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Yugan Surya
Contact at support@indiaglitz.com