தமிழகத்தைப் பின்பற்றி 1 ரூபாய்க்கு உணவு… டெல்லியில் கலக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எம்பியாகத் தேர்வு செய்யப்பட்டார். கிழக்கு டெல்லி தொகுதியின் எம்பியான இவர் தனது தொகுதி மேம்பாட்டினை கருத்தில் கொண்டு நேற்று ஒரு உணவகத்தை திறந்து வைத்துள்ளார். அந்த உணவகத்தில் ஒரு சாப்பாடு வெறும் ரூ.1 என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலிவு விலைக்கு உணவை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழக அரசே அம்மா உணவகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பல்வேறு கடைகளை திறந்து உள்ளது. அதுவும் கொரோனா நேரத்தில் இந்த உணவகத்தின் பயன்பாடு மிகவும் அதிகம் என்றே கூறப்படுகிறது. இத்திட்டத்தை வேறு சில மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் எம்பியுமான கவுதம் கம்பீரும் இத்திட்டத்தைத் பின்பற்றத் தொடங்கி உள்ளார்.
டெல்லியின் கைலாஷ் நகரில் இயங்கி வரும் தன்னுடைய சமூக நல அமைப்பின் மூலம் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் பல உணவகங்களை தொடங்க ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இந்த உணவகம் மதியம் 12-3 மணி வரை இயங்கும் என்று கூறப்பட்டு உள்ளது. இதில் 1 ரூபாய்க்கு 2 ரொட்டி, 2 பொறியல் வகைகள் மேலும் அரிசி சாதம், பருப்பு ஆகியவை வழங்கப்படும் என்றும் சத்தான மற்றும் சுகாதாரமான முறையில் வழங்குவதே தனது நோக்கம் என்றும் கவுதம் கம்பீர் தெரிவித்து உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout