பாகிஸ்தான் பாதுகாப்பை கிண்டல் செய்து காம்பீர் பதிவு செய்த வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,October 01 2019]

சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை மத்திய அரசு நீக்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்தியாவில் உள்ள ஒருசில எதிர்க்கட்சிகளும் பாகிஸ்தானும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. காஷ்மீர் மக்களை மத்திய அரசு கொடுமைப்படுத்துவதாக சமீபத்தில் நடைபெற்ற ஐநா கூட்டத்தில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் காஷ்மீர் பாதுகாப்பு பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் பாகிஸ்தான், முதலில் கராச்சியின் பாதுகாப்பை பற்றி யோசியுங்கள் என்று பொருள்படும் வகையில் ஒரு வீடியோவை, முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்பியுமான கௌதம் காம்பீர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

அதாவது அந்த வீடியோவில் தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் செல்லும் வாகனங்களுக்கு முன்னும் பின்னும் சுமார் 20 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புக்காக செல்கின்றனர். ஒரு நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் சுதந்திரமாக செல்ல கூடிய அளவுக்கு கூட பாதுகாப்பு பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சி இருக்கும்போது நீங்கள் ஏன் காஷ்மீரை பற்றி கவலை கொள்கிறீர்கள் என்றும், முதலில் கராச்சியின் பாதுகாப்பு குறித்து யோசியுங்கள் என்றும் அந்த வீடியோ மூலம் கெளதம் காம்பீர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவால் பாகிஸ்தான் நெட்டிசன்கள் கடுப்பாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது