முகேஷ் அம்பானியை ஓரம்கட்டிய கவுதம் அதானி… தலைச்சுற்ற வைக்கும் சொத்து மதிப்பு!

கவுதம் அதானியின் சொத்துமதிப்பு கடந்த ஆண்டு 600% உயர்ந்ததால் ஆசியாவின் முதல் பணக்காரர் மற்றும் இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற பட்டத்துடன் விளங்கிய முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி தற்போது முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

இந்தியாவில் முன்னணி பணக்காரர்களாக விளங்கிவரும் முகேஷ் அம்பானி, கவுதம் அம்பானி இருவருக்கும் இடையிலேயே தொடர்ந்து கடுமையான போட்டி நிலவிவருகிறது. ஆனாலும் கடந்த சில வருடங்களாக முகேஷ் அம்பானி தனது தொழில் முதலீட்டில் நல்ல வருமானத்தைப் பெற்று இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற நிலையில் இருந்து வந்தார்.

தற்போது ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிவரக் கணக்குகளின்படி முகேஷ் அம்பானி 87.9 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 11 ஆவது பணக்காரராகப் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். இதேநேரத்தில் கவுதம் அதானி 88.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 10 ஆவது பணக்காரராக உயர்ந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு தெற்காசியாவின் முதல் பணக்காரர் எனும் பட்டத்தைப் பெற்றிருந்த பைனான்சியர் உரிமையாளர் சாங்பெங் ஜாவோவையும் கவுதன் அம்பானி பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்.

கவுதம் அம்பானி தன்னுடைய முதலீட்டைத் தொடர்ந்து துறைமுகங்கள், சுரங்கள், பசுமை ஆற்றல் போன்ற துறைகளில் முதலீடு செய்துள்ளார். முகேஷ் அம்பானி தகவல் தொடர்பு, தொலைத் தொடர்பு மற்றும் பெட்ரோலியம் போன்ற துறைகளில் தனது முதலீட்டை செலுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் 235 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் முதல் இடத்திலும் 183 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். பில்கேட்ஸ் 4 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.