close
Choose your channels

கவுண்டமணி - யோகிபாபு இணைந்து நடிக்கும் படம்.. ஒரே படத்தில் ஒட்டுமொத்த நகைச்சுவை கூட்டம்..!

Tuesday, July 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் ஒரு திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் யோகி பாபு உட்பட தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த நகைச்சுவை நடிகர்கள் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் வித்தியாசமான டைட்டில் வெளியாகி உள்ளது

நடிகர் கவுண்டமணி நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் தற்போது வயது முதிர் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவி மரியா, வையாபுரி, ராஜேஸ்வரி, நாகேஷ் பேரன் கஜேஷ், மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி, சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக் உள்ளிட்டவர்கள் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தை சாய் ராஜகோபால் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ‘கிச்சா வயசு 16’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment