மோடி பதவியேற்பு விழா தினத்தில் கவுண்டமணியின் பதவியேற்பு விழா.. வைரல் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Sunday,June 09 2024]

பிரதமராக மோடி இன்று மூன்றாவது முறையாக பதவியேற்க இருக்கும் நிலையில் கவுண்டமணி நடித்த ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் பதவி ஏற்பு விழா என்ற பேனர் காணப்படுவதை அடுத்து இது ஒரு மிகப்பெரிய ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.

தமிழ் திரையுலகின் காமெடி நடிகராக இருந்த கவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அதில் அரசியல்வாதியாக நடித்திருக்கும் கவுண்டமணி தேசியக் கொடியை தனது சட்டையில் குத்தியுள்ள நிலையை அவருக்கு பின்னால் பதவி ஏற்பு விழா என்ற பேனர் காணப்படுகிறது. மேலும் மிக விரைவில் பொதுமக்களை ‘ஒத்த ஓட்டு முத்தையா’ சந்திக்க உள்ளார் என இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமராக மோடி பதவி ஏற்கும் அதே நாளில் பதவி ஏற்பு விழா என்ற டைட்டிலுடன் இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது ஆச்சரியமான ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.

சாய் ராஜகோபால் இயக்கத்தில் சித்தார்த் விபின் இசையில் உருவாகி உள்ள இந்த படம் சென்டிமென்ட், அரசியல், காமெடி என அனைத்தும் கலந்த படம் ஆகும். இந்த படத்தின் கவுண்டமணி மூன்று சகோதரிகளின் அண்ணனாக நடித்திருக்கிறார் என்றும் மூன்று சகோதரிகளையும் மூன்று சகோதரர்களுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று பிடிவாதமாக இருப்பது தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

கவுண்டமணியின் சகோதரிகளாக சைதன்யா, அபர்ணா மற்றும் பிந்து ஆகியோர் நடித்த நிலையில் இந்த படத்தில் நாகேஷ் பேரன் கஜேஷ், மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி, சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.