செல்ஃபி கேட்ட ரசிகருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பிரபல வீராங்கனை… வைரல் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டென்னிஸ் போட்டிகளில் பலமுறை சாம்பியன் ஷிப் பட்டங்களை வென்ற பிரபல வீராங்கனை ஒருவர் தன்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளுமாறு கோரிக்கை வைத்த ஒரு ரசிகரையே திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இதுகுறித்த தகவல் தற்போது இணையத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான கார்பன் முகுருசா 2016 இல் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தையும் 2015 மற்றும் 2017 இல் விம்பிள்டன் சாம்பியன் ஷிப் பட்டங்களையும் வென்று உலக அளவில் பிரபலமாக இருந்துவருகிறார். மேலும் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த நபராகவும் இருந்து வருகிறார். அதோடு 2021 இல் WTA இறுதிப் போட்டிகளில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று பலரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
இப்படி உலகப் பிரபலமாக இருந்துவரும் கார்பன் முகுருசா கடந்த 2021 இல் தனது வீட்டிற்கு அருகே இருந்த பூங்காவில் சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொண்ட நபரை தற்போது நிச்சயதார்த்தம் கொண்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பேசிய 26 வயதான கார்பன், என்னுடைய வீட்டில் நான் சலிப்பாக உணர்ந்தபோது அருகில் இருந்த பூங்காவிற்கு சென்றேன். அங்கு வந்த ஆர்தர் போரிஜஸ் ‘அமெரிக்க ஓபன் போட்டிக்கு வாழ்த்துகள்‘ என்று கூறியபடியே செல்ஃபியை எடுத்தக்கொண்டார். அப்போது அழகாக இருக்கிறாரே என்று தோன்றியது. இதையடுத்து பலமுறை நாங்கள் அந்த பூங்காவில் சந்தித்துக் கொண்டோம்.
பின்னர் அமெரிக்க ஓபன் போட்டியை நேரில் காண வந்த ஆர்தர் போரிஜஸ் தன்னுடைய காதலை என்னிடம் தெரிவித்தார். இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத நான் கண்ணீர் விட்டு அழுதபடியே காதலை ஏற்றுக்கொண்டேன். தற்போது இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டோம் என்று கூறி புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் உலகப் பிரபலமாக இருந்துவரும் வீராங்கனை ஒருவர் பூங்காவில் சந்தித்த தனது ரசிகரையே கரம்பிடிக்க இருக்கும் தகவல் பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com