பிரபல அரசியல் கட்சியில் இணைந்த நடிகர் கஞ்சா கருப்பு

  • IndiaGlitz, [Saturday,December 08 2018]

இயக்குனர் பாலா இயக்கிய 'பிதாமகன்' படத்தின் மூலம் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான நடிகர் கஞ்சா கருப்பு அதன்பின் சிவகாசி, திருப்பதி, சிவப்பதிகாரம், தாமிரபரணி, பருத்திவீரன், ராம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ் பெற்ற நடிகர் கஞ்சா கருப்பு தற்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கஞ்சாகருப்பு திடீரென அரசியலில் குதித்துள்ளார். சற்றுமுன் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த நடிகர் கஞ்சா கருப்பு, அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். வரும் தேர்தலில் அவர் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.