இன்னும் 100 நாள் தான்.. 'கங்குவா' படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Tuesday,July 02 2024]

சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள மாஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகிய ‘கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விரைவில் இந்த படத்தின் விளம்பர பணிகளும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு, கங்குவா படம் வெளியாக இன்னும் 100 நாள் தான் இருக்கிறது என்றும், ‘கங்குவா’ அரசன் வர இருக்கிறார் என்றும் பதிவு செய்துள்ளது. வெறும் 30 வினாடிகளே உள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் சுமார் 350 கோடி செலவில் உருவாகியுள்ளது.