பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா கங்குலி? வைரல் டுவிட்!
- IndiaGlitz, [Wednesday,June 01 2022]
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலி சற்று முன் பதிவு செய்த டுவிட்டரில் இருந்து அவர் பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
கங்குலி தனது டுவிட்டரில் ’கிரிக்கெட் உலகிற்கு நான் வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த முப்பது வருடங்களில் எனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி. மக்களுக்கு உதவுவதற்காக நான் இன்று ஒரு புதிய விஷயத்தை தொடங்கப் போகிறேன். இது பலருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். நான் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் புதிய அத்தியாயத்திற்கு உங்களின் ஆதரவு தேவை’ என பதிவு செய்துள்ளார்.
இதிலிருந்து கங்குலி ஒரு புதிய விஷயத்தை துவங்கப் போவதாக கூறியிருப்பதால் அவர் பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறாரா? என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
— Sourav Ganguly (@SGanguly99) June 1, 2022