தலைமை ஆசிரியர் உள்பட 15 மாணவர்கள் செய்த கூட்டு பாலியல் பலாத்காரம்:
Send us your feedback to audioarticles@vaarta.com
10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரை 15 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர் என 18 பேர் சேர்ந்து சுமார் 7 மாத காலமாக கூட்டு பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது
பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் ஒரு ஏழை மாணவி படித்து வந்தார். இந்த மாணவி கழிவறை செல்லும்போது ஐந்து மாணவர்கள் கூட்டு பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் இந்த வீடியோ காட்டி மிரட்டியே அவர்கள் அடிக்கடி அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விஷயம் அந்த ஐந்து மாணவர்களின் நண்பர்களுக்கும் தெரியவர அவர்களில் 10 பேர் அதே மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்த விஷயம் தலைமை ஆசிரியரின் பார்வைக்கு தெரியவர அவர் அந்த மாணவிக்கு நடந்த கொடுமைக்கு தீர்வு காணாமல் அவரும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி மேலும் இரண்டு ஆசிரியர்களும் சேர்ந்து சுமார் 7 மாத காலம் அந்த மாணவிக்கு தொடர் பலாத்கார தொல்லை கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து மிக தாமதமாக தெரிந்து கொண்ட மாணவியின் தந்தை உயர் போலீஸ் அதிகாரிகளிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது தலைமை ஆசிரியர், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதி 13 மாணவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிகிராது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments