இளையராஜா-எஸ்பிபி பிரச்சனையில் நான் யார் பக்கம்? மனம் திறந்த கங்கை அமரன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென இளையராஜாவிடம் இருந்து நோட்டீசு வந்தது. தன்னுடைய பாடல்கள் எஸ்பிபி பாடக் கூடாது என்றும் அவர் நோட்டீஸ் அனுப்பி இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தகவல் தெரிந்ததும் இசையமைப்பாளர் கங்கை அமரன் இளையராஜாவிடம் சென்று சண்டை போட்டதாகவும், எஸ்பிபி நமக்கு செய்த உதவியை மறந்து விட்டாயா? பணத்திற்காக ஏன் இப்படி செய்கிறாய்? நாம் சம்பாதிக்காத பணமா? என்று எஸ்பிபிக்கு ஆதரவாக தான் பேசியதாகவும் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
மேலும் நாங்கள் சிறுவயதில் சாப்பாட்டிற்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது எங்களுக்கு உதவி செய்தவர் எஸ்பிபி என்றும், அவரை எங்களால் மறக்க முடியாது என்றும், அதுமட்டுமின்றி என்னுடைய திருமணத்தின் போது மிக அதிக வேலைகளை பார்த்தவர் எஸ்பிபி தான் என்றும் தனது பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார்.
இளையராஜா - எஸ்பிபி பிரச்சனையில் தான் எஸ்பிபிக்கு ஆதரவாகத்தான் பேசியதாக கங்கை அமரன் தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com