இனிமேல் இளையராஜா குறித்து பேசினால்? திரையுலக பிரபலத்திற்கு மிரட்டல் விடுத்த கங்கை அமரன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து இசை பெரிதா? பாடல் பெரிதா என்று சர்ச்சைக்குரிய வகையில் இளையராஜா குறித்து மறைமுகமாக பேசிய நிலையில், இனிமேல் இளையராஜா குறித்து பேசினால் நடப்பதே வேறு என்று வைரமுத்துவை நேரடியாக கங்கை அமரன் மிரட்டி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இது குறித்து கங்கை அமரன் வெளியிட்டுள்ள வீடியோவில் ’இளையராஜா இல்லை என்றால் இன்று வைரமுத்து இல்லை. அவரது முதல் பாடலான ‘இது ஒரு பொன்மாலை பொழுது என்ற பாடலை இளையராஜா பயன்படுத்தாவிட்டால் வைரமுத்து என்பவர் யார் என்று தெரிந்து இருக்காது. இதற்கு மேல் அவர் இளையராஜா குறித்து வாயை திறந்தால் நடப்பதே வேறு’ என்று கூறியுள்ளார்.
மேலும் ’மனிதனுக்கு தான் வளர்ந்த விதம் குறித்து நினைத்து பார்த்து நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் இன்றைக்கு பாரதிராஜா இல்லை என்றால் நாங்கள் இல்லை என்பது போல் இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து இல்லை என்றும், வைரமுத்து ஒரு நல்ல கவிஞராக இருக்கலாம் அவர் ஒரு நல்ல மனிதர் இல்லை’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
’இளையராஜா எப்படி தனது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறாரோ அதேபோல் வைரமுத்துவும் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும், உங்களை வாழ வைத்தவர்கள் பாரதிராஜாவும் இளையராஜாவும், இளையராஜா படத்தை வைத்து நீங்கள் தினமும் கும்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
’இனிமேல் இளையராஜா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் இளையராஜா பேச மாட்டார், அவருடைய தம்பி நான் இருக்கிறேன், நான் தான் பேசுவேன்’ என்றும் கங்கை அமரன் அந்த வீடியோவில் தெரிவிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"மொழி VS இசை... எது பெருசு"..? - வைரமுத்து.. “மனுசன்னா நன்றி வேணும்”.. - கங்கை அமரன்#GangaiAmaran #Vairamuthu #Ilaiyaraaja #NewsTamil24x7 pic.twitter.com/NkvJZXTzWd
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) April 30, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com