சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த ஆர்.கே.நகர் வேட்பாளர்
Tuesday, March 21, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். இந்த ஒரு தொகுதியின் வெற்றியில்தான் அதிமுக ஆட்சி தொடர்வதும், பறிபோவதும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர். சசிகலா அணி இந்த தேர்தலில் தோல்வி அடைந்தால் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவேதான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுக சசிகலா அணியின் வேட்பாளர் டிடிவி தினகரன் செயல்பட்டு வருகிறார்.
ஒருபக்கம் ஓபிஎஸ் அணியினர் தங்களுக்கு மக்களின் செல்வாக்கு முழுமையாக உள்ளது என்பதை நிரூபிக்கும் தேர்தலாகவும், அதிமுக இரண்டாக உடைந்திருக்கும் நிலையில் இந்த தொகுதியில் வெற்றி பெற்று மேலும் ஒரு எம்.எல்.ஏவை அதிகரித்து கொள்ள நினைக்கும் திமுக இன்னொரு பக்கமும் உள்ளது.
இந்நிலையில் இந்த தொகுதியின் பாஜக வேட்பாளராக பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். சசிகலா குடும்பத்தினரால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டுள்ள கங்கை அமரன், இந்த இடைத்தேர்தலின் மூலம் தனது எதிர்ப்பை சசிகலா குடும்பத்தின் மீது காட்ட பயன்படுத்தி கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை கங்கை அமரன் அவருடைய் வீட்டில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது ஆர்.கே.நகர் தேர்தலில் கங்கை அமரன் வெற்றி பெற ரஜினிகாந்த் வாழ்த்தியதாக இயக்குனர் வெங்கட்பிரபு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment