ரஜினி, டி.ஆரிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை. கங்கை அமரன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு-அனிருத்தின் பீப் பாடலால் அவர்கள் இருவருக்கு மட்டுமின்றி வேறு சிலருக்கும் பிரச்சனை எழுந்துள்ளது. குறிப்பாக பீப் பாடல் குறித்து கேள்வி கேட்ட நிருபர் மீது கோபம் கொண்டதாக இளையராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில், புதுவை பத்திரிகையாளர் சங்கம் அவர் மீது வழக்கு போட ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் பீப் பாடல் குறித்த கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களுக்கு இளையராஜாவின் சகோதரரும் பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
பீப் பாடலில் சம்பந்தப்பட்ட அனிருத்தின் உறவினரான ரஜினியிடமும், சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தரிடம் பத்திரிகை நண்பர்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை என்று கங்கை அமரன் தனது சமூக வலலத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இளையராஜா, அவர் இயற்றிய பாடல்களையே கேட்கும் வழக்கம் இல்லாதவர் என்றும் அவரிடம் மற்றவர்கள் இசையமைத்த பாடல் குறித்து கேள்வி கேட்டது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.
உண்மையான உழைப்பால் உயர்ந்த இளையராஜா போன்ற இசைப் பெரியோர்களிடம் எதைப்பற்றி கருத்துகள் கேட்பது என்ற வரம்பு வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com